மழலைப்பருவமே இளம் பிராயமே
குட்டி போடப்
பத்திரப்படுத்திய
மயிலிறகு.
பென்சில் சீவிய
துகளில்
செய்த
”ரப்பா்”
தண்டவாளததில்
”காந்தமாக”
வேண்டி
வைத்த
இரும்புத் துண்டு
.
தீப்பெட்டியில்
செய்த
டெலிபோன்
கண்ணாடி
வெளிச்சத்தில்
காட்டிய
சினிமா
ஈர
மண்ணில்
எழுந்த
கோட்டைகள்
"Hindu"
கப்பல்
இவைகளுடன்
இழந்து
போன
என்
குழந்தைப்
பருவம்
எங்கே?