வேலையில்லாத பட்டதாரிகள் 555

நான்...
பட்டம் வாங்கி பல
நாளாகியும்...
இன்னுமொரு வேலை
இல்லையென...
சாப்பிட உட்காரும்
போதெல்லாம்...
சாதத்தோடு சில சவுக்கடிகள்
தரும் அம்மாவோடு...
சாயங்காலம் வீடுதிரும்பி அப்பா
உதிர்க்கும் அமில வார்த்தையை...
இனியும் கேட்க
கூடாதென்று...
எத்தனை முறை முயற்சித்தும்
தோற்றுத்தான் போனது...
என் தற்கொலை
முயற்சி...
என்னை நிலம்விற்று படிக்க
வைத்த அப்பாவிற்காக...
நாளை எப்படியும் வேலை கிடைக்கும்
என்ற நம்பிக்கை மட்டும்...
இன்னும் சாகவில்லை.....