கோபம் முறத்து வா

கோபம் முறித்து வா
===================

நீண்ட பிரிதலுக்குப் பின்பு
மே ஐ ஹோப் யூ டூயிங் பெஸ்ட் என்று கேட்டதனால்
நாலாம் நபர் ஆகிவிட்டாய்
அதற்குப்பின்னால் நாம் சந்திக்கவில்லை

தாழக்கோயிலின் மரநிழலில்
நாம் பேசிய பாம்புப்புற்று கதைகளை
ஒளிந்துகேட்கும் கருங்குருவிக்கு
நேரம்போகவில்லை
அந்த கடைசி சண்டைக்குப் பிறகு
அர்த்தசாலையில் கடையிட்டு
உட்காந்திருக்கும்
பூக்காரப்பாட்டியின் கடைசி
இரண்டுமுழம் பூக்கள் விற்பனைக்கில்லையாம்

ஒவ்வொருப்பூவாய் உதிரவிட்டு உதிரவிட்டு
உன் வரவிற்காய் காத்திருந்த இடத்தில்
கரிக்கீல் உருகுகின்றது
காலச்சுகள் பதியமாகின்றன
சற்றுவிட்டுப்போய் திரும்பிப்பார்க்கையில்
அங்கே சிலர் தரிசித்துச் சென்றனர்

இது எனக்கானமுறை என்று
எனது வகையில் தேக்கிவைத்த புணர்வுகளுக்கு
விடைக்கிடைக்கவிலை
அடைப்பட்டுக்கிடந்த
உன் உதிர்க்கூந்தல் பிசிறுகள்
காற்று வர்ணிக்காத பாவிகளாகின

அணைத்ததில்
சலிக்காத பாகங்களுக்கு பற்றாக்குறை இருந்தால்
அனுபவித்தப்பின்பு
கடவுளை அருக பயப்படும் க்ரூரன் ஒருவனின்
நீ பத்தினியா என சத்தியம் கேட்கும்
மூர்க்கத்தைத் தேடு ம்ம்ம்ம்
என்வீட்டிற்கு வரும் சாலைவளைவுகள்
நீ கடந்துமறைய காத்திருக்கின்றன
கோபம் முறித்து வா

ஓடிக்கழிந்த வியர்வைத்துளிகளைத் தணிக்க
அன்றுபோல் இன்றும்
வானம் மந்தமூட்டிக் கிடக்கிறது
யோசித்துப்பாரேன்
அன்றைய இறுதி அழுத்தத்தில்
வெற்றுச்சங்கு தடுமாற நீ காற்றுவிழுங்கினாய் ம்ம்ம்
முகக்காடுகளில் வசந்தம் முளைத்தது

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (9-Sep-15, 3:05 am)
பார்வை : 229

மேலே