வெங்காயம்

வெங்கா யமாம் வெங்காயம்
விருப்பம் கூட்டும் வெங்காயம்
விலையை மட்டும் கேட்டுவிட்டால்
நிலை குலைக்கும் வெங்காயம்

உருட்டி விட்டால் தரையிலே
உருண்டு ஓடும் வெங்காயம்
அரியும் நேரம் கண்ணிலே
அழுகை தரும் வெங்காயம்

குண்டு வடிவ வெங்காயம்
குவிந்து கிடக்கும் சந்தையில்
கையில் எடுத்து விலைகேட்க
கலங்க வைக்கும் வெங்காயம்

சிவப்பு வண்ண நிறத்திலே
கவர்ந்து இழுக்கும் வெங்காயம்
வாங்கி சமைத்து உண்ணவே
ஏங்கித் தவிக்கும் உள்ளமே

வட்டம் போன்ற உருவத்தில்
கெட்டி நிறைந்த வெங்காயம்
தொட்டு எடுத்து உரித்திட
கொட்டும் கண்ணீர் கண்களில்

ரத்தம் முழுதும் உடலிலே
சுத்தம் செய்யும் வெங்காயம்
பித்தம் கபம் அனைத்ததையும்
பின்னுக்குத் தள்ளும் வெங்காயம்

உரித்துப் பார்த்தால் உள்ளுக்குள்
ஒன்றும் இல்லா வெங்காயம்
பூரி குறுமா செய்திடவே
பொறுத்த மான வெங்காயம்.

எழுதியர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (10-Sep-15, 2:46 am)
Tanglish : vengaayam
பார்வை : 64

மேலே