காதல்

ஊரே தூங்கும் நடு சாமம் எனக்கு மட்டும் தூக்கம் இல்லை.
உள்ளுக்குள் உன்நெனப்பு கொல்லுவதஎங்கே சொல்ல.
படுத்து புரளுரன்.,பாயிடம் உளருறன்.
கருத்த இரவினில் ஒருத்தியாய் உறங்குறன்.
அடைமழை பிடிச்சிடுச்சி.,அணைவெள்ளம் உடங்சிடுச்சி..
அடங்காத மனசுக்குள்ள காதல் வெத மொளச்சிடுச்சி.
தண்ணிக்குள்ள தவளைஎல்லாம் தானாக கத்துது..
கண்ணுக்குள்ள உன்நெனப்பு முள்ளாக குத்துது,..
சில்லென காத்து கொல்லென கொல்லுது..
பக்கத்தில் உனை வேண்டி பாழ்மனம் சொல்லுது.
என்கூடநீஇருந்தா பகல் இரவு தெரியாது.
உன்னை பாத்து விட்டா கதிரவனும் எரியாது.
ஆசையில தவிக்கிறன். அணைபோடமுடியல.
காசு இருந்தும் உனை மறக்க மருந்தில்லை கடையில.
என்வீட்டு சாரல் மழை உன் வீட்டில் தூறலியா..
புலம்புகிற என் மனசு உனை வந்து சேரலையா?

எழுதியவர் : கு.தமயந்தி (10-Sep-15, 6:38 am)
Tanglish : kaadhal
பார்வை : 98

மேலே