தினக்கூலி

கொத்தனாரின்..
கொச்சைப்பேச்சு தவிர்க்க
காதோடு சேர்த்து..
சும்மாடு கட்டியிருந்தாள்..
செங்கல் சுமக்கும் அந்தப்பெண்.!
பாவம் அவள் அறிந்திருக்கவில்லை..
அருகில் விளையாடும்
தன் குழந்தையின் அழுகையும்..
அதில் நுழையாமல் போய்விடும் என்று.!

எழுதியவர் : வசந்த நிலா (10-Sep-15, 5:38 pm)
Tanglish : thinakkooli
பார்வை : 409

மேலே