குறை தேடும் உலகில் குறையுள்ள நான் குற்றவாளியா
அனைவரும் சிரிக்குமிடத்தில் நான் நடிக்கிறேன்..
அழுகிறேன் யாருமற்ற இடத்தில்...
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..
குற்றமில்லா என்நெஞ்சு குறுகுறுக்கும் குறை காணும் மாந்தர்கள் மத்தியில்..
இறைவன் உனக்கு தந்ததை எனக்கு தரவில்லை
அவன் எனக்கு தந்ததை உனக்கு தரக்கூடாது அதன் வலி நான் மட்டுமறிவேன்..
மாற்றங்கள் தேடி என்னால் நகர முடியவில்லை மாற்றினேன் என்னை
மாற்றங்கள் தேடி நகர்வதை விட்டு..
விட்டுப்புறப்படுபவர் பலர் வித்திட்டவர்களை தவிர..
குறை தேடும் உலகில் குறையுள்ள நான் குற்றவாளியா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
