நினைவுகளின் கோர்வை

நான் பிடித்து வைத்திருக்கும்
தொடர்பற்ற காட்சி - மனத்
திரை கிழித்துக் கொண்டு
அடிக்கடி வெளியேறி விடுகிறது....

எட்டிக் குதிக்கும் ஓணான்களை
ஒரு போதும் காணாத நினைவுக்குள்
கல் கொண்ட கைகளே
அங்குமிங்கும்
எட்டிக் குதிக்கின்றன.....

கிணற்றுக்குள் தெரியாமல்
விழுந்து விட்ட குடம் என
பாதி மூழ்கி, மீதித் தடுமாறி
சல சலப்பதாகவே கனவுக்குள்
கிணறு தோண்டுகிறேன்...

இரவு சுமக்கும்
எல்லா சுவற்றிலும்
நின்று அடிக்கும்
சிறுநீர் சுவடென ஒரு
பெண் தேவதையைக் காமுறுகிறேன்...

தொப்பலாய் நனைந்த
பெருமழை ஒன்றில்
எங்கள் வீடு விழுந்து
மண் ஆனதில்
ஊர்க் கண்களை
கோரக் காட்சியாக்கிய
நினைவுகளாகிறேன்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (12-Sep-15, 11:35 am)
Tanglish : ninaivugalin korvai
பார்வை : 75

மேலே