வலிக்கிறது

அறுவை சிகிச்சையில்
பிறந்த ஆண் மகன் நான்..
அருமை அம்மாவின்
அடி வயித்தை கீறி..
அழகாய் பிறந்த
ஆண் குழந்தை நான்..
அப்போது அம்மாவுக்கு
வலித்ததே தெரியவில்லை..
இப்போது எனக்கு வலிக்கிறது
அம்மா சொல்லும் போது எல்லாம்..
அறுவை சிகிச்சையில் பிறந்தாய்
நீ என்று..
இனி மேலாவது அம்மாவிற்கு
வலிக்காமல் பார்த்து கொள்ள,..
வேண்டும் என்று துடிக்கிறது
என் உள்ளம்...