கிராமத்து கிறுக்கன்
ஆக்கி வச்ச சோத்துக்குள்ள
அடைஞ்சிருந்த ஆவிபோல
உயிரு பறக்க செய்தவளே!!
உலகம் மறைச்சு நின்னவளே!!
மனசுக்குள்ள நீதான் புள்ள!
மார்கழி மேகத்தில ஒருபாதி
கிழிச்சுவந்து உருக்கியெடுத்து
உயிரில் குழைச்சு உன் தேகம்
நனைக்காவடி!!
மச்சமெல்லாம் கண்டுபிடிச்சு
மையல் கொண்டு முத்தமிட்டு
மண்ணோடு கலந்த மழையா
உனக்குள்ள தொலையவாடி!!
தூரம் போகும் உந்தன் நெருக்கம்
தூணொன்ற என் மேல் சாச்சுப்போக
கண்ணிரென்டும் முகிலாய் ஆனதடி
உசிரெங்கும் தீப்பொறி வீழுதடி!!
இரவல் கொடுத்த நக போல
பத்திரமா திரும்புவாயோ பாதியில
உன்ன நீயே திருடுவாயோ!!
பதறிப்போன நெஞ்சத்தில
மெளனப்பாறையால குத்திறியே!!
உங்கம்மா எடுத்த நஞ்சு
உன்னத்தானே மாத்திருச்சு
மனசுக்குள்ள என்ன வச்சு
பூட்டிக்கிட்டு மண்விட்டு
வெளிநாடு போறியேடி!!
புல்லுக்குள்ள கூடுகட்டி
புள்ளகுட்டி பெத்துப்போட்ட
புளுவப்போல நெளியிறனே!!
உன்ன புரிஞ்சிருந்தும் பித்தம்
கொண்ட சித்தம் தெளியலையே!!
உன் போல பெண்தானே
உங்கம்மா!! கண்காணா
தேசத்தில சந்தோசம்
கிட்டுமின்னு நெனச்சிருப்பா!
நெருப்பு மோந்து குடிச்ச போல
அப்பாவியா உன்மனசு ஆனதத்தான்
அப் பாவி அறிந்திருப்பாளோ!!!!