உதிர்ந்த இலைகள்

*
எழுத நினைத்ததை மறந்து விட்டான்
மறந்துப் போனதை எழுதி வைத்தான்.
*
கேலி செய்தவனே
கேலிக் கிரையானான்
*
யாரும் துக்கத்தில் இல்லை
ரொக்கத்தில் தான் வாழ்கிறார்கள்.
*
பிரமாதமாக நடக்கிறது பிரசாரம்
யாருக்கும் மயக்கம் தெளியவில்லை.
*
அவரவர் பிரார்த்தனையாக
தண்ணீரில் மிதக்கிறது பணம்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (15-Sep-15, 11:26 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : uthirntha ilaikal
பார்வை : 111

மேலே