தமிழால் உயர்வேன்சிறுவன் குரல்
எழுத்தறி வித்தவன் முதன்முதலில்
எழுதிக் காட்டிய தாய்த்தமிழின்
எழுத்தெலாம் எழுதித் தேர்ந்திடுவேன்,
ஏணியாய் எனையவை ஏற்றிடுமே,
உழுதவன் வளம்பெற வளர்பயிர்போல்
உறுதுணை எனக்குத் தந்திடுமே,
பழுதிலா தாய்த்தமிழ் படிப்பதால்நான்
புகழொடு பெருநிலை பெறுவேனே...!