இனியவளே,,,
இனியவளே....!
என் கனவில் வந்து
உன் மெளனவிழிப் பார்வையில்
நினைவு நாற்றுகளை
நடவு செய்கிறாய்
என் இதய வயல்களில்...!
அவை
நீரின்றித் தவிக்கின்றன....
ஒரு முறை இங்கு வந்து சென்றிடு..
உன் குளிர்பார்வையில்
அவை செழித்து வளரட்டும்...!
சேர்ந்தே அறுவடை செய்வோம்
நம் திருமண நாளில்....
நான்கு சுவர்களுக்குள்.....!