அறிமுகமான நரிமுகம்

காவலுக்கு வைத்திருந்த கடிநாய்
கள்ளனுக்கு வாலாட்டுகிறது
இலஞ்சமாய் எலும்புத்துண்டு.

அதிகம் படிக்காத ஆரணங்கு
அதியுயர் பதவி நாற்காலி
இலஞ்சமாய் மானம்

அடம்பிடிக்கும் குழந்தை
அழாமல் போகிறது பள்ளிக்கூடம்
இலஞ்சமாய் இனிப்பு.

அங்கவீனமான இளம்பெண்
அமையபெற்றாள் நல்லதொரு வரண்
இலஞ்சமாய் சீதனம்

சவக்கிடங்கில் உறவொன்றின் பிணம்
வைத்தியசாலையில் அழுகின்ற மனம்
வெளியே கொண்டுவந்தது பணம்.

நாற்காலியில் அமர்கின்ற அவசரம்
மேடைப் பேச்சுக்களில் பரவசம்
மேடைக்குப் பின்னால் இலவசம்

இப்படித்தான்
அந்தரங்கத்தில் ஆகிடும் அறிமுகம்
அவரவர்க்கேற்ப ஆங்காங்கே
அகிலத்தில் உலவிடும் நரிமுகம்.
அதுதானே இலஞ்சமென்னும் பொதுமுகம்.!

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Sep-15, 3:21 am)
பார்வை : 83

மேலே