துளிபா துளிகள்
மரங்கொத்தியாய்
துளையிட்டது மரத்தை
இயந்திரம்
சிறகுகள் கலைந்தவுடன்
சிலிர்த்து போனது
கிளை....
யாவர் கைகளிலும்
தாலட்டப்படுகிறது
கைபேசிகள்.....
கால்களை
சிறைவைத்தேன்
சபாத்துகளுக்குள்.....
மரங்கள் மரணம்
விதவையாய் போனது
கானகம் (காடு)......
பொம்மைகளை பொத்தி பாதுகாப்பதில்
தயாகிவிடுகின்றன
குழந்தைகள்