ஒரு திருமணமான ஆண் ,அவன் பெண் தோழியுடன் நட்பு சரிபட்டு வருமா நியாயமான நட்புக்கு ஏது களங்கம்

என் தாய்க்கு பிறகு நான் பார்த்த வெறொரு உலகம் என் தோழி ,
இன்று இன்னொருவனின் உலகமாய் மாறியிருக்கிறாள் .
அவள் உலகத்தில் , அவள் தாய் ,தந்தை மற்றும் சகோதர சகோதரிகளை ஏற்றுகொள்ளும் அவ்வுலகம் சகோதரனுக்கு ஒப்பான என்னை வேற்றுகிரகவாசி என்கிறது.

என் கண்ணீரை துடைத்த அவ்(வுலகம்)வுள்ளம்,
இன்று அவளுலகத்தில் உள்ளவர்களின் கண்ணீரை துடைக்கிறது.
நான் என்ன செய்வேன், அவ்வுலகம் என்னை வேற்று கிரகவாசியாக மாற்றிவிட்டது.

வாழ்க்கையெனும் வானில் ,
சூரீயனாக தாயும்,
வெண்ணிலாவாக மனைவியும் இருப்பர்.
அதைப்போல் விண்மீனாக மின்னிய என் தோழி ,
இன்று வேறொருவனின் வானில் சூரியனாய் மாறியுள்ளாள் .

அவள் சூரியனாக மாறிவிட்டாள் என்று அவ்வுலகம் அவளை என் வானில் விண்மீனாக மின்ன தடுக்கிறது.

எனது வானில் சூரியன் மற்றும் வெண்ணிலவுடன் சேர்ந்து,
விண்மீனும் இருக்க ஆசைப்படுகிறேன் .

எழுதியவர் : கவிக்குமார் முருகானந்தம் (19-Sep-15, 4:55 pm)
பார்வை : 175

மேலே