அந்நிய தேசம் வாழும் ஓர் இந்தியன் உணர்வு
காதலித்ததில்லை
என பொய் சொல்ல மாட்டேன் நான்..
உன்னை பார்க்கையில் மட்டும்
ஏன் இந்த ஆனந்தம்..
உன்னை ஸ்பரிசிக்கையில் மட்டும்
ஏன் இந்த மயிர்கூச்சம்..
வானத்தில் தவழும் மேகம் போல..
அன்னை மடி தவழும் குழந்தை போல..
பூவின் இதழ் உரசும் தென்றல் போல..
நானும் வந்தேன்.. உன்னுள் தவழ..
வேடந்தாங்கல் வரும் வேற்றுநாட்டு பறவை போல்
நானும் இன்று என் தாய் நாடே..
வசதிக்கு பஞ்சமில்லா அயல்நாட்டில்
நீ தந்த அந்த ஒன்றுக்கு மட்டும் எப்போதும் பஞ்சம்..
அந்த ஒன்றை தேடியே உன்னுள் வந்தேன்
விமானம் இறங்கியதுமே கிடைத்துவிட்டது
நீ தந்த அந்த பெயர் தெரியாத ஒன்று..
ஏறியதும் பறிக்கப்பட்டுவிட்டது
அதே நீ தந்த பெயர் தெரியாத ஒன்று..
அறியாத பெயர் அறியாமலே இருக்கட்டும்
நம் அன்புக்கும் அதுஎன்றும் பாலமாக அமையட்டும்..
இன்றோடு விடைபெறுகிறேன் அன்னை நாடே
மீண்டும் வருவேன் அந்த ஒன்றைத்தேடி..

