பெத்தவங்களுக்கே அர்த்தம் தெரியாத பேருங்க

டேய் அங்கே கால்வாய்லெ நீச்சலடிச்சிட்டு இருக்கறவங்க மூணு பேரும் யாரோட பசங்க?

அட அவுங்க மூணு பேரும் நம்ம மாரியப்பனோட பசங்க.

ஓ... அப்பிடியா? அது தான் மாரியப்பனை உரிச்சு வச்ச மாதிரி இருக்காங்க. சரி அவுங்க பேருங்க என்ன?


மூத்தவன் விஷால், ரண்டாவது பையன் குஷால், மூனாவது பையன் சுஷால்.

அட என்னப்பா இந்தப் பேருங்களக் கேட்ட ஒடனே எதோ வட இந்திய கிராமத்திலே இருக்கற மாதிரி நெனைக்க வைக்குது. சரி அந்த பசங்களப் பெத்தவங்களுக்காவது அந்தப் பேருங்களுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா?

இல்லப்பா. நானும் ஒரு தடவ மாரியப்பனக் கேட்டேன். “ எல்லாரும் பிள்ளங்களுக்கு இந்திப் பேரா வைக்கறாங்க. நானும் எதோ மனசிலெ உறுத்தின ஓசைகள வச்சு எம் பசங்களுக்குப் பேரு வச்சிட்டம்பா. விஷால் நம்ம தமிழ் நாட்டிலே இருக்கற நடிகர்ன்னு தெரியும். விஷால் குஷால், சுஷால்-ங்கற மூனு பேருங்களுக்கும் என்ன அர்த்தம்னு சத்தியமா எனக்குத் தெரியாதப்பா” -ன்னு மாரியப்பன் சொன்னாரு.

--------------------------
சிரிக்க அல்ல. பிற மொழிப் பெயர்களின் பொருள் அறியவும் தமிழர்களின் இந்திப் பெயர் மோகத்தைச் சுட்டிக்காட்டவும்.

--------------------------

Vishal = great, grandeur, unstoppable
Kushal = skilled, efficient, right, good, happy, clever, cool, auspicious, proficient, skill, strategy, efficiency.
Sushal = good smell

எழுதியவர் : மலர் (23-Sep-15, 6:58 pm)
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே