அல்ல அல்ல

எழுதப்படாத காவியம் சரித்திரம் அல்ல
தெரியப் படாத கற்பனை காட்சிகளல்ல
தீட்டப்படாத சித்திரம் ஓவியமல்ல
சிரிக்ககூடாத ஒன்றும் நகைச்சுவையல்ல
மறைக்க முடியாத ஒன்றும் இரகசியமல்ல
சேர்க்கப்படாத ஒன்றும் சொத்துமல்ல
கருணை இல்லாதது கடவுளுமல்ல
போற்ற முடியாதது புகழ்ச்சியுமல்ல
அமைக்கப்படாதது கூட்டமுமல்ல
தீட்டப் படாதாது கூர்மையுமல்ல
இணைக்கப் படாதது பாலமுமல்ல
செதுக்கப்படாதது சிலையும் அல்ல
சொல்லப்படாதது காதலுமல்ல
சொக்க வைக்காதது வித்தை அல்ல
அணைக்க முடியாதது அன்புமல்ல
ஆளப்படாதது தேசமும் அல்ல
அணிவகுப்பு இல்லாதது படையுமல்ல
ஆண்டவன் அற்றது ஆலயமுமல்ல
ஆசைப்படாதவன் மனிதனும் அல்ல

எழுதியவர் : பாத்திமா மலர் (24-Sep-15, 6:50 am)
Tanglish : alla alla
பார்வை : 66

மேலே