நான் ரசித்த இரவு
இந்த இன்பமான இரவில்
என் இமைகளை மூட
என் இதயம் மறுக்கிறது
இது நான் இயற்கையின் மேல்
கொண்ட காதலாலா - இல்லை
இறைவன் இரவையும் படைத்து
இமையையும் படைத்த காரணத்தினாலா
இன்று மட்டும் ஏன் இந்த இரவு
சந்திர அழகி சிரித்து நிற்க
சூரிய அழகன் சந்திர அழகிக்கு
கொடுத்த காதல் பரிசோ