கரைந்து போக விழைகிறேன்

கரைந்து போக விழைகிறேன்

உன்னில் அடர்ந்திருக்கும்

அமைதியினூடே !

கலைந்து போக விழைகிறேன்

படர்ந்து திரியும்

மேகங்களோடு !

ஆழ்ந்து போக விழைகிறேன்

அசையாமல் தவமியற்றும்

மலைச் சிகரங்களோடு !

உருகிக் கலந்து ஓட விழைகிறேன்

உற்சாகக் கரைபுரளும்

நதியோடு நதியாக !

இயற்கையே உன்மடியில்

நான் இளைப்பாறும் கணங்களிலெல்லாம் .....

உன்னில் தொலைந்து போக விழைகிறேன் ...

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (26-Sep-15, 9:41 pm)
பார்வை : 86

மேலே