வெற்றியின் கதவை மூடிய இருள்
சூடாத கேளிப்பவழமாலை
சுவைக்காத ஏளனச் சுவை
தின்னாத கிண்டல் கற்கண்டு
கடிக்காத தடைக்கரும்பு
இமைமூடா உறக்கமற்ற இரவின் தேன்
உண்ணா பசிவயிற்றுப்பழஇனிமை
காணாத அவமான அறுசுவை விருந்து
இவை எல்லாமே
வெற்றியின் கதவை
மூடியிருக்கும் கற்றை இருள்.