பணம்

ஏ பணமே ,

நாசிக்கில் பிறந்து,
நயவஞ்சகர் உடன் நல்வுறவு வைத்து,
மெத்தைக்கு அடியிலும்,
bmw வடிவிலும்,
இரும்புப்பெட்டியிலும் குடியிருக்கிறாய்,

தென்னை,பன ஓலை காற்றுவீசும் ஏழைக்குடிசையில் குடிபுகாமல்

எட்டுஅடுக்கு மாடியில் இருந்து எட்டிப்பார்க்கிறாய்,

என்னை அடைவது அவ்வளவு எளிது அல்ல
என சிரிக்கும் காந்தியா?

என்னில் உள்ள எந்த மொழியில் அழைத்தாலும் என்னை அடையமுடியாது என்பதுதான் நீ சொல்லவரும் செய்தியா??

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (28-Sep-15, 8:54 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 84

மேலே