பெற்றோரின் கையொப்பம்
நீ வாழ வேண்டும்
என்று அவர்களின்
வாழ்க்கையைச் செலவழிக்கின்றனர்
நீ சாப்பிட வேண்டும் என்று
அவர்கள் பட்டினி இருக்கிறார்கள்
நீ நல்ல ஆடையை அணிய அவர்கள்
கந்தல் ஆடையை உடுத்துகிறார்கள்
நீ நன்றாக படிக்க
அவர்கள் படிக்காத பாமரர் ஆகின்றார்கள்
நீ செருப்பு
போட வேண்டுமென
அவர்கள் வெறுங்காலில் நடக்கிறார்கள்
நீ சந்தோஷமாக
இருக்க அவர்கள் முதியோர் இல்லத்திற்கே செல்கின்றனர்
கனவில்
சுமந்தவளை
நினைத்துவிட்டு....
கருவில்
சுமந்தவளை
மறந்து விடாதே....