வெளிச்சம்

பேரக் குழந்தையின் இரண்டாவது
பிறந்த நாள் விழாவிற்கு
தாத்தாவும் பாட்டியும்
வாழ்த்து சொல்வதற்கு
பரிசுப் பொருட்களும் பணமும்
கொண்டு போயிருந்தனர்
எதிர் பார்த்த மாதிரியே
அமோக வரவேற்பும் மகிழ்ச்சியும்
தத்தாவுக்கும் பாட்டிக்கும்

சொல்ல முடியாத சந்தோசம்
குழந்தையை தூக்கி கொஞ்சிக் குலாவினர்
கேக் வெட்டும் நேரம் வந்ததும்
மெழுகுவர்த்தி ஒளியில்
பலவர்ண இனிப்பு வகைகள் புடை சூழ
பலத்த கை தட்டல்களுடன்
பாட்டுப் பாடிக் கேக் வெட்டி
குழந்தைக்கு அனைவரும் ஊட்டிய
அழகோ அழகுதான்

தன் பேரக் குழந்தையைத்
தான் தூக்கி வைத்து கேக் ஊட்ட
முடியாமல் அடுத்த வீட்டுக் குழந்தை
அந்த இடத்தை விட்டு நகராமல் நின்றதும்
சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத
நிலையில் பாட்டியின் நிலையும்
அதுவும் குழந்தைதான் இருந்தும்
அதற்கு நான்கு வயதுக்கு மேல்
அக்குழந்தையின் தாய் அதைக் கண்டித்தும் இல்லை
அக்குழந்தையை தூக்கி வேறு இடத்திலாவது
இல்லை இல்லை இரண்டும் இல்லை

அக்குழந்தை பிடித்த பிடியாக கேக் முன்னாலே
ஆனால் பாட்டி கொஞ்சம் சுயநலமும்
என்ன சொல்வது இது சில நேரங்களில் சிலர்
உண்மையான பாசம் இப்படியும்
குழந்தையின் மீது அளவற்ற பாசம்
தன் பேரக் குழந்தையின் சுதந்திரம்
பறி போய் விட்டது போன்ற உணர்வு
இருந்தும் சுதாரித்துக் கொண்டு
கமராவின் முன்னால்
நின்ற பாட்டியின் முகத்தில் மகிழ்ச்சி
சந்தோசம் களை எல்லாம் குறைந்து

இதுவும் ஒருவகையில் நியாயம் தான்
இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி
அப்படி ஒரு பாசம் குழந்தை மீது
எங்கு எந்த நிகழ்சிகளில் கலந்த போதும்
இடம் பொருள் அறிந்து கொள்ள
தெரிந்து வாழ எல்லோர்க்கும் உரிமை
அதில் பெருமையும் மகிழ்வும் உணர
அன்பும் பாசமும் மகிமையும் நம்மிடமே
ஆனந்தம் கொள்ள அனைவரும் நாடும்
பாசம் வேடமல்ல வெளிச்சம்

எழுதியவர் : பாத்திமா மலர் (1-Oct-15, 7:18 pm)
பார்வை : 108

மேலே