செய் அல்லது செய்

காலம் என்பது மூலப்பொருள்
தூங்கியே பொழுதை கரைத்துவிடாதே

விதைகள் பூமியில் தூங்கியருந்தால்
உலகின் சமநிலை சரிந்தேயிருக்கும்

உறக்கம் என்பது பொழுதுபோக்கல்ல
ஊக்கம் கொடுக்கும் மருந்து மட்டுமே

உடலை மட்டும் சற்று உறங்கவைத்து
உணர்வை விழித்து உழைக்கச்செய்

விதியை விரட்டி வீதியில் நிறுத்தி
மதியை வைத்து மதிக்கச்செய்

மூச்சுக்காற்றின் ஈரம் கொண்டு
பசுமை காக்கும் காட்டை செய்

எண்ண அலையை கடலில் வீசி
பார் கவி உரைத்த திரவியம் செய்

உருக்கிய மண்ணை உலோகமாக்கி
உழைப்பை குறைக்கும் இயந்திரம் செய்

கற்பனைத்திரையை கிழித்தெறிந்து
ஒசோன் அடைக்கும் கோட்டையை செய்

ஒவ்வொரு செயலின் முடிவைப்பார்த்து
மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்

எழுதியவர் : ஸ்ரீராமுலு (1-Oct-15, 6:05 pm)
Tanglish : sei allathu sei
பார்வை : 52

மேலே