முதல்வன் 2 வ எதிர் பாக்கலாம்

கற்பனை ...

ஒருவர் : என்ன சார் இந்த படத்தோட hero வேற ஆனா அவருக்கு கட் அவுட் வைக்காம இந்த பட டைரக்டர் படத்துக்கு கட் அவுட் வெச்சிருக்காங்க ......

மற்றொருவர் : சார் இந்த படத்தோட கதையே பெத்தவங்கள மதிங்க பிள்ளைங்கள அப்பறம் பாக்கலாம் என்னும் கருவ வச்சி தான் படம் பெயர் கூட " பெத்தவனுக்கு 6 அடி பொறந்தவனுக்கு 80 அடியா " அதனால தான் இந்த படத்த உருவாக்குன டைரக்டர்க்கு கட் அவுட் வெச்சிருக்காங்க ரசிகர்கள் ...

ஒருவர் : இது என்ன சார் புதுசா இருக்கு ..

மற்றொருவர் : இனிமே எல்லாம் இப்படித்தான் ...

ஒருவர் : அப்படின்னா இனிமே அரசியலுக்கு வர்றேன்னு டைரக்டர் எல்லாம் அறிக்கைவிட ஆரம்பிச்சிடுவாங்க..

மற்றொருவர் : நீங்க சொல்றது சரிதான் இத பாத்துட்டு ஒரு டைரக்டர் அவரோட அடுத்த படத்துக்கு " எடுக்குறேன் படம் பிடிக்க போறே இடம் " ன்னு பேர் வச்சிருக்காரு .....இன்னொரு டைரக்டர் கோபமா " சொல்லிகொடுத்தவன் சுவருக்கு பின்னாடி " ன்னு ஒரு படம் எடுக்குறாரு......

ஒருவர் : அப்போ கூடிய சீக்கிரம் முதல்வன் 2 வ எதிர் பாக்கலாம் ...

மற்றொருவர் :.....

எழுதியவர் : samuel (4-Oct-15, 2:24 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 91

மேலே