பிரிவு
பார்க்க கண்கள்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......
நேசிக்க மனம்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......
சுவாசிக்க இதயம்
வேண்டும் என்றாய் - எதை
என்று கேட்க்காமல் போனேன்......
உன்னைப் போல் உறவு கிடைக்க - எனக்கு
இன்னொரு ஜென்மம் வேண்டும் என்றாய்
அப்போதுதான் திகைத்து நின்றேன் - ஆனால்
இப்போதுதான் புரிந்து கொண்டேன்
இந்த ஜென்மத்தில் என்னை
பிரியவே எண்ணியிருந்தாய் என்று !..........
- தஞ்சை குணா