தென்னப்பிள்ளை

நான் வைச்ச தென்னம்பிள்ளை
காணப் போச்சே என்ன செய்ய

வைச்சக்கண்ணு மரமா மாற
அதைப்பாத்து
என் மனம் மகிழ்ச்சியில் ஆட

இரண்டுவேளை தண்ணீ ஊத்தி
முள்ளுகம்பு வேலிக்கட்டி
முகில் தொட வளர்ந்த மரம்
முறிச்சுபோச்சு இன்றையதினம்

இடி விழுந்து மரம் போன
இப்படி நான் அழ மாட்டேன்

காத்துக்கு சாய்ச்சியிருந்தா
கவலைப்பட மாட்டேன்

கண்பட்டு காஞ்சுயிருந்தா
கண் கலங்க மாட்டேன்

இப்படி

களவானி கைக்கு போனதே என் மரம்
அதை கண்டுபிடிச்சு எரிங்கடா எந்தன் பிணம்

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (4-Oct-15, 6:29 pm)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 65

மேலே