தீஞ்சுவை, தீந்தமிழ் - விளக்கம்

தீஞ்சுவை, தீந்தமிழ் - புணர்ச்சி விதி கூறவும் என்று கடையநல்லூர் வே.ஆவுடையப்பன் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டிருக்கிறார்.

அதற்கான விளக்கம் தருகிறேன்.

தீஞ்சுவை, தீந்தமிழ் – தேன்போன்ற சுவை, தேன் போன்ற இனிமையான தமிழ் என்று பொருள்படும்.

தேன் – தேம் – தீம் – தீஞ் – தீந்

தேன் + சுவை = தீஞ்சுவை

தேன் + தமிழ் = தீந்தமிழ்

தீம் + சுவை = தீஞ்சுவை

தீம் + தமிழ் = தீந்தமிழ்

பொருட்குறிப்பு:

தீம் of தேம். n. (திவா)

1. Sweetness, pleasantness - இனிமை. தீங்கதிர்த் தோற்றமென்னவே (சீவக. 2419).

2. Nectar - அமுது.

3. Sweet - இனிய. நெருநலுந் தீம்பல மொழிந்த (அகநா. 239).

தேம்:

1. Sweetness, pleasantness - இனிமை. தேங்கொள் சுண்ணம் (சீவக.12)

2. Fragrance, odour - வாசனை. (பிங்) தேங்கமழ் கோதை (பு. வெ. 12, 7)

3. Honey - தேன். தேம்படு நல்வரை நாட (நாலடி, 239)

4. Honey bee - தேனீ தேம்பாய் கடாத்தொடு (பதிற்றுப்.53, 17)

5. Toddy - கள் ((சூடா)

6. Must of an elephant - மதம் தேம்படு கவுள..யானை (முல்லைப்.31)

7. Oil - நெய். தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங்குஞ்சியின் (குறிஞ்சிப். 111)

.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Oct-15, 1:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 3381

மேலே