மன்னிப்பாயா

உன் அனுமதி கேட்காமலேயே.....
உன்னை நான் நேசித்துவிட்டேன்!....

உன் அனுமதி பெறாமலேயே.....
உன் சுவாசத்தை தேடி சுவாசித்து
விட்டேன்.....

உனக்கு தெரியாமல்
உன் காலடிதடத்துடன் நடந்து
வருகிறேன் நிழல் போல.....

உன்னோடு பழகிய நாட்களையும்
பேசிய வார்த்தைகளையும் பொக்கிஷமாய்.....
என் இதயத்தில் பதுக்கிக் கொண்டேன்!...

கனவுகளில் உன்னையே முத்தம்
கொடுக்கிறேன்.....

இதற்காக என்னை நீ மன்னிப்பாயா.........?

எழுதியவர் : kanchanab (6-Oct-15, 8:43 am)
Tanglish : mannippaayaa
பார்வை : 105

மேலே