மானிட நெறிகள்
சில மடிகள்
சில நொடிகள்
வருடும் ஏர்கள்
நழுவிப் போகும் நீர்கள்
தழுவித் தாவி
தழும்பு தந்து
தந்தி தச்சடிக்கும்
தாமரைகள்
சில அருவிகள்
கண்களின் இடுக்கில்
சில நினைவுகள்
கனவுலகின் இடுக்கில்
உயிரினைத் தாண்டி
உறவுகள் உண்டு
இதயங்கள் தேடும்
வலிகளும் உண்டு
ஒரு நாள்
நேசங்கள் தூசாகிடும்
துயரங்கள் தோள் கொடுக்கும்
கண்ணீர் திண்மமாகும்
நீங்கிய பொழுதுகள்
வளியற்ற காடுகளில்
காய்ந்த சருகுகள்
தேய்ந்த ரேகைகள்
பல வரிகளில்
இனிமை மழைகள்
சில வரிகளில்
மழைகள் இனிமை
என் வரிகளில்
வலியே இனிமை
வலியே மழை
வலியே வழி
மண் தேடும் வழியல்ல
மண் சேரும் வலியல்ல
என்னைக் கவிச் செய்யும்
மானிட நெறிகள்