தொட்டுவிடும் தூரத்தில் வட்டநிலா
தொட்டுவிடும் தூரத்தில் வட்டநிலா .
துள்ளிவந்து விழுந்திடுமே என்கைகளில் .
பட்டுப் போன்ற மனத்துடை பெண்மகளே !
மொட்டுவிட்டத் தாமரையும் மோகத்துடன்
சட்டெனவே நாணத்தால் இதழ்மூடும் .
சிட்டுப்போன்றே பறந்திடாதே செவ்வானத்தில் .
கட்டியணைக்க ஆசைப்பட்டேன் காதலியே !
முத்தத்தினைப் பெற்றுக்கொள் முழுமதியே ..!
பித்தத்தினால் பேசுகிறேன் பொறுத்தருள்வாய் !!!