மாற்றம் - முன்னேற்றம் - பீமா வனிசா

இப்போதெல்லாம் அநேக மாற்றங்கள்
அவளிடத்தில்

மாற்றங்களென்பதை விட
முன்னேற்றங்களென்றே சொல்லலாம்

டெடிபியரையும் புலி பொம்மையும்
தொட்டிலில் போட்டு தாலாட்டுகிறாள்
சில நேரம் அவை சேட்டை செய்வதாகவும்
மிட்டாய் கேட்டு அழுவதாகவும் சொல்லிக்கொள்கிறாள்

பொம்மைகளை பரப்பி வைத்து விளையாடியவள்
அவற்றை அடுக்கி வைக்கவும் பழகியிருக்கிறாள்

பிள்ளைபோல பாவித்து நான் அடம்பிடிக்கும் வேளைகளில்
அன்னைபோல பாவனை செய்து ஆறுதலும் கூறுகிறாள்

இப்போதெல்லாம் அநேக முன்னேற்றங்கள் அவளிடத்தில்

மாற்றம் - முன்னேற்றம் - பீமா வனிசா

எழுதியவர் : ஹஸீனா பேகம் (9-Oct-15, 1:14 pm)
பார்வை : 176

மேலே