தோல்வி கண்டு துவளாதே

நடை போடா நன்னிலம் உண்டு

நான்கு புறமும் திசைகள் உண்டு

எதிர்த்து வரும் தோல்வியினை கண்டு

முட்டி வீழ்த்துவேன் என் சிரம் கொண்டு

போட்டிகள் நிறைந்த உலகில் தினம் தினம் தோல்வியே

போக மாட்டேன் துவண்டு இது நான் நடத்தும் வேள்வியே

கண்முடி உறங்கும் நேரம் கனவுகள் வந்து போகும்

நான் கண்திறந்து பார்க்கும் நேரம் தோல்வி அனைத்தும் வெந்து போகும்

என்னை கண்டு எல்லோரும் செய்யும் பகடி

எவருக்கும் தெரியாது இது எதிரிக்கு நான் ஊதும் மகுடி

தோல்வி என்பது கருங்கல்லலை போல் நிலையானது அல்ல

கானல் நீராய் மாறி களைவது

என்னதான் செய்தலும் தோல்வி வெறும் தூசியே

கால் வலுக்க கடல் அருகில் முளைக்கும் பாசியே


- த.மா.கவிதாசன்

எழுதியவர் : (12-Oct-15, 4:04 pm)
சேர்த்தது : தமாசரத்குமார்
பார்வை : 111

மேலே