ஏன்?.......
அம்மாவின் சமையலறை டப்பாவில் பணம்
அப்பாவின் பாக்கெட்டில் பணம்
தங்கையின் ஜாமேன்றி பாக்ஸில் பணம்
அக்காவின் பாட நோட்டிற்க்குள் பணம்
அண்ணனின் கிரெடிட் கார்டில் பணம்
தம்பியின் உண்டியலில் பணம்
பாட்டியின் சுருக்குப்பையில் பணம்
தாத்தாவின் வெத்தலை டப்பாவில் பணம்
தோழியோ,நண்பனோ பணமிருந்தால்,
இல்லையென்று கூறாமல் தரும் பணம்
காதலிக்கும்போது பணத்தேவைக்காக, இதுபோல்
எத்தனையோ கதவை திறந்து வைத்த இறைவா!
பலர் எதிர்ப்பைமீறி காதல் திருமணம் செய்தபின்
பணத்திற்காக எந்தபக்கம் திரும்பினாலும்
இல்லையென்ற ஒரேகதவை மட்டுமே
எப்போதும் திறந்துவைத்திருக்கிறாயே,
அது ஏன்.........................................இறைவா?