ஆசை

உன்னழகினை ரசிக்கும்
மனம் இல்லை!
நீ எனை ரசித்திடவே
ஏக்கம் கொண்டேன்!
உன்னை கற்பனையில்
காதலிக்க ஆசை இல்லை!
உனக்குள் கரைந்திடவே
நான் கற்பனை கொண்டேன்!
யாரோ ஒருத்தி யென்று
ஏற்கும் எண்ணம் இல்லை!
கடைசி நொடியும்
உனக்கென வாழ்ந்திடவே
காதல் கொண்டேன்!

எழுதியவர் : கௌரிசங்கர் மாது (14-Oct-15, 7:18 pm)
Tanglish : aasai
பார்வை : 132

மேலே