காதல் வெறும்
"காதல் என்பது தேன்கூடு
அதை கட்டுவதென்றால் பெரும்பாடு."
கவிஞன் எழுதி வைத்தது உண்மையே.
காதலும் கல்யாணமும்
சட்டென்று நடக்காத
வாழ்க்கையை வாழ்பவர்
இங்கே ஆயிரமாயிரம்.
காதலை உயிரென நினைத்து விழுந்தவரும் உண்டு,
விழுந்து எழுந்து நடந்தவரும் உண்டு.
கடவுளை நம்பாதவன் கூட காதலை நம்பியதுண்டு,
காதலில் தோற்றபின் கடவுளை தேடியதுண்டு.
கடவுளும் காதலும் கற்பிக்கப்பட்ட பொருளானது
கண்மூடி கலங்கி நிற்கவும் காலம் வகை செய்தது.
கனவுகளுக்கு கற்பனைகள் கை கொடுத்தன,
காதல் கனவு கற்பனை என்றாகி கலந்தது, கரைந்தது.
இனி என்ன செய்ய?
வாழ்க்கை ஒரு புத்தகம் என்றால்
அதில் காதல் என்பது அட்டை.
அட்டை கிழிந்ததற்காக
அழுது கொண்டிருப்பதை விட
புத்தகம் பத்திரமாக
இருக்கிறதே என்று
புன்னகை செய்யலாம்.
உங்களுக்குப்பின்னும்
புத்தகம் இங்கே
பேசப்படும் இலக்கியமாகட்டும்,
இல்லை நினைவு சின்னமெனும்
"தாஜ்மஹால்" ஆகட்டும்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
