காதல் குறுங்கவிதை தொடர் -09 -முஹம்மத் ஸர்பான்

உன் சுவாசம்
தொட்டால்
என் மண் உடைகிறது.
கார் மேகம் விழிகளில்
நிறைந்திருக்க
நெஞ்சுக்குள் நினைவுகள்
தளம்பாய் பூக்கிறது.
காதலெனும் குடைக்குள்
பொழிகின்ற மழைத்துளிகளில்
நீயும் நானும் நனைகின்றோம்.
உன் புன்னகையை
குத்தகைக்குத் தா
என் கண்ணீரை
வட்டியாக தருகிறேன்.