தொலையவிருக்கும் இனிய காலைப்பொழுது
கருமையுமில்லாத வெண்மையுமில்லாத
மேகங்கள் வானில் மேடை போட.....
தனது கதிர்கள் சுருங்கி போனதே என்று,
பரிதி மறைந்து விளையாட ....
தனது மேல் தங்கிய ஒரு சில துளிகளைப்
படபடவென சிறகடித்துச் சிதறவைக்க.....
எனது குரலையும் கேளுங்கள் கேளுங்கள் என
குயில்களும் மயில்களும்
பெயர் அறியாத சின்னஞ்சிறு பறவைகளும்
தனது பாணியில் இசைத்தாளம் தட்ட..
விழவா விழவேண்டமா என
இலையோர துளிகள் மண்ணைப் பார்த்துக் கண்சிமிட்ட...
உடலை வருத்தாத இதமான குளிர்க்காற்று வீச
வியர்வைச் சுரப்பிகள் தற்காலிகமாக மூடிக்கொள்ள...
அருமை அருமை.....
அமைதி ததும்பும் ரம்யமான காலையைத் தந்த
இயற்கை என் மனதை நெகிழ்விக்க........
எங்கோ '' ப்பாம் ப்பாம்'' என தொடர்ச்சியாய் சப்தம் கேட்க
சுருங்கித்தான் போனது என்னுள்ளம்
ஒரு கசப்பான உண்மையை எண்ணி.... !!!!