கவிதை எழுத நினைத்த பொழுது...

மழைக்கால வானவில் ....
மாலை நேர மஞ்சள் வானம் ....

அதிகாலை பனி படர்ந்த பூக்கள்....
ஆகாயத்தில் இரவுநேர முழுமதி....

சிற்றலை ஆடும் நீலக்கடல் ....
சீறிப்பாயும் காட்டருவி......

விடியல் நேர செஞ்சூரியன் ....
வீதியினில் அம்மன் உலா....

அம்மா ஊட்டிய பிடி சோறு....
ஆற்றில் விட்ட காகிதக்கப்பல் ....

தூங்கும் நேரத்தில் மெல்லிசைப்பாடல்...
துயிலெழும் வேளை சுப்ரபாதம்....

மின்சார கம்பிகளில் சிட்டுக்குருவிகளின் சல்லாபம்...
மீன் பிடிக்க குளக்கரையோரம் காவல்.....

புத்தக இடுக்கில் மயில்த்தோகை....
பூதக்கண்ணாடியில் புன்னகை முகம்....

கவிதை எழுத நினைத்து காகிதத்தை எடுத்தேன் .
கண்முன்னே வந்து நின்றது இந்த காட்சிகள்....

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா... (3-Jun-11, 3:54 pm)
பார்வை : 477

மேலே