குழந்தை

உன் மழலை சிரிப்பிலும்,
உன் மௌன அழகிலும்,
உன் தொடர் பேச்சிலும்,
உன் நடை உடையிலும்,
உன் கள்ளமில்லா உள்ளத்திலும்,
உன் அறிவின் எல்லையிலும்,
உன் கோபத்திலும்,
ஏன்
உன் அழுகையிலும் கூட
நான் காண்கின்றேன்
ஓர் புதிய உலகை....
வாழ்கின்றேன்
அதில் நானும் ஒர்
குழந்தையாக...!