கலைமகள் வணக்கம்
கந்த புராணம்
-------------------------
தாவறு முலகெலாந் தந்த நான்முகத்
தேவுதன் றுணைவியாய்ச் செறிந்த பல்லுயிர்
நாவுதொ றிருந்திடு நலங்கொள் வாணிதன்
பூவடி முடிமிசைப் புனைந்து போற்றுவாம் .
----------------------------------------------------------------------
{இ .பொ}
அழிவற்ற உலகங்களெல்லாவற்றையும் படைத்த நான்கு
திருமுகங்களையுடைய பிரமதேவன் மனைவியாய் அவ்வுலகந்த் தோறும்
நிறைந்த பல ஆன்மாக்களின் நாக்களிலெல்லாம் வீற்றிருக்கும்
நன்மை வாய்ந்த கலைமகளது தாமரை மலர் போலும் திருவடிகளைச்
சிரசிற் சூடித் துதிப்பாம் .
(அ-ப.)தா அறும் -- அழிவில்லாத
-------------------------------------------------------------------------------------------------------------------