கணினி மின் தென்றல்

மலர் சுமந்து நின்ற
வாசத்தை
தென்றல் தன் கரங்களில்
ஏந்தி வந்து
சாளரத்தின்
அருகில் நின்ற
என் தமிழ் நெஞ்சத்தில்
அள்ளி வழங்கிச் சென்றது !
கவிதை மலர்கள் பூத்தன !
கவிதை மலர் வாசத்தை
கணினி மின் தென்றல்
ஏந்தி வருகிறது
உங்கள் மனச் சாளரத்தை
கொஞ்சம் திறந்து வைக்கலாமே !
உங்களுள்ளும் பூக்கள் பூக்கும்
வள்ளன்மை
கடை எழுவருடன் ஏன் நின்று போகவேண்டும் ?
புதுமைக் கவிதைப் படையிலும்
அது தொடரட்டுமே !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (23-Oct-15, 8:45 am)
Tanglish : Kanini Min thendral
பார்வை : 121

மேலே