பிறப்பு

பிறப்பு👶
""""""""""""""""
உள்ளிருந்து ஒரே,
அபாயக் கூப்பாடு...

கொஞ்சம் பொறுத்துக்கம்மா...
உடனிருக்கும் மருத்துவச்சி
கிழவியின் குரல்...

கிழவியின் குரலில்,
அனுபவம் தெரிகிறது...!

அவளை பார்க்கையில்,
கிழவிக்கு...
அனுதாபம் பிறக்கிறது...!!

அவர்கள் இருப்பதோ,
ஒரு குடிசை வீடு...!

இரவு நேரம்...!!

சானி மொழுகிய தரையில்,
ஓலைப்பாய் விரித்து...
மல்லாக்க படுத்திருக்கும்,
அவளை பார்த்து...

கொஞ்ச நேரம்,
வலிய பொறுத்துக்கம்மா...!
சீக்கிரம் முடிஞ்சிடும் தாயி...!!
என்றாள் கிழவி...!!!

முடியல ஆயா...
வலிக்குது...
இப்படியே செத்துடலாம் போலிருக்கு...

எனக்குள்ள இருக்கும்,
என்...
குழந்தைக்காகத்தான்...
என்று சொல்லும் போதே...

அம்மாமாமா.......!!!

என்கின்ற சத்தம்...
அவள் வாயிலிருந்து...!

சில நொடிகளில்,
அவளும் அம்மாவாகிறாள்...
ஒரு குழந்தைக்கு...!!!

அதனால் தான்,
என்னவோ...

தான் பெற்ற குழந்தைக்கு
சிறு வலி...
ஏற்பட்டால் கூட,
துடி துடித்துப்போகிறாள்...!
தாய்...!!

தான் பெற்ற வலி...!
தான் பெற்ற குழந்தையும்...!!
பெறக்கூடாது என்பதற்காக...!!!

இவண்
✒ க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (26-Oct-15, 6:07 am)
சேர்த்தது : க முரளி
பார்வை : 414

மேலே