வழிப்போக்கர்கள்

வார்த்தைகளில்
சூன்யம் வைத்து
வாழ்க்கையில் விளையாடும்
உறவுகள் எல்லாம்
வழிப்போக்கர்களே!

இவர்கள் போக்கில்
போகும் வாழ்க்கை
விடியல் காணாது!

வஞ்ச நெஞ்சங்கள்
பேசும் நெறிகள் எல்லாம்
அவனைப் பார்த்தே சிரிக்கும்
வள்ளுவன் வாக்கு!

புலியின் கூடாரத்தில் சிக்கிய
எலி வளை ஒன்று தேடினால்
விளங்கிடுமாமோ வாழ்க்கை
துலங்கிடுமாமோ..?
கேலியாய் முகிழ்ந்திடும்
காட்சிகள் எல்லாம்
வலியாய் முடித்திடும்!

ஆகவே
வீசும் வார்த்தைகளில்
விஷங்கள் வேண்டாம்!
அறிவே விஷயங்களாகட்டும்.
அவதூறுகள் அரங்கேற்றாதீர்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (26-Oct-15, 2:32 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : vazhippokkarkal
பார்வை : 75

மேலே