தேடிச் செல்கிறேன்
திரும்பா பயணமாக காலத்தின் படகேறி
திசையறியாக் கடலில் வாழ்வதனைத் தேடி
வறுமை இல்லா பணம் வேண்டி
வருத்த மில்லா மகிழ்ச்சி வேண்டி
வஞ்சக மில்லா உறவு வேண்டி
வயதுக் கேற்ற வாழ்வு வேண்டி
திக்கற்ற உலகில் வக்கற்ற மனிதனாய்
நாளும் பொழுதும் தேடிச் செல்கிறேன்
வாழ்வென்ற ஒன்றை நான்வாழ வேண்டி
-மூர்த்தி