அன்புடன் பற்றுதல் காண்பாய் --- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உழைப்பிலே உறுதி உடையவர் தமக்கே
------ உன்னத உலகினில் பெருமை .
தழைத்திடும் தர்மம் தரணியில் நாளும்
------ தன்னல மற்றதோர் வாழ்க்கை .
பிழைப்பெலா மென்றும் பிசகியும் போகா
------ பின்னரும் வந்திடும் நமக்கே .
அழைத்திடும் வரையில் நின்வழி நோக்கி
------ அன்புடன் பற்றுதல் காண்பாய் !
வாய்பாடு :-
( விளம் மா விளம் மா
விளம் விளம் மா )