உனக்காக என் உயிர்

அழுகை பிடிக்கும் எனக்கு ...
வேதனைகள் நீ தந்ததால்....!!!

வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!

தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!

எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!

இதென்ன...
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!

+

கே இனியவன்
காதல் சோக கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Oct-15, 8:55 pm)
Tanglish : unakaaga en uyir
பார்வை : 306

மேலே