விழுதாய் இறங்கு

விழுதாய் இறங்கு

இதுதான் நீயென்று
இருந்து விடாதே
இன்னமும் உன்னிலுண்டு
மறந்து விடாதே !
சிறைப்பட்டு விட்டதால்
உன் திறன்கள்
துருப்பட்டுப் போய்விடுமா?
உளி உன்னிடம்தான்
உன்னைச் செதுக்கிக் கொள்!
அழுது இரங்காதே
என்றென்றும்
விழுதாய் இறங்கு !
ருக்மணி.

எழுதியவர் : கவிஞர் ருக்மணி (28-Oct-15, 12:04 am)
சேர்த்தது : கவிஞர் ருக்மணி
Tanglish : viluthaai irangu
பார்வை : 572

மேலே